செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பெரிய தெருவில் உள்ள ஜீவா மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை பள்ளி தலைவர் ஜி கே பாபு ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் துணைத் தலைவர் கோமலவதி பாபு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். ஏசு பிறந்த நாளை நாம் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறோம் . அவர் பிறப்பை நினைவு கூறும் விதமாக குடில் அமைக்கப்பட்டிருந்தது. மழலையர் பள்ளி ஆசிரியை பிரீத்தி ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் ரகுவீரன் விழாவில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாசகத்தை நினைவுகூரும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது என்று கூறினார். மேலும் அவர் ஆடி பாடி குழந்தைகளை மகிழ்வித்தார். திருக்கழுக்குன்றம் அடுத்த ஈகை பகுதியில் உள்ள ஜீவா மெமோரியல் பப்ளிக் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜீவானந்தம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
செங்கல்பட்டு அருகே ஜீவா ஹேப்பி மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா