காஞ்சிபுரம் மாவட்டம்செங்குன்றம் அருகே உள்ள திருவெற்றியூர் ஒன்றியம் பர்மா நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டதின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் மற்றும் பள்ளிக்கு தேவையான தளவாடம் பொருட்கள் வழங்கும் விழா ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரேம்ஆனந்த் தலைமையில் நடை பெற்றது. ஆசிரியை பேபி அனைவரையும் வரவேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் பாபுசாம்டேணியல் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் தலைமை நிலைய அலுவலர் பிரபு கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் மற்றும் பள்ளிக்கு தேவையான தளவாடம் பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.இதில் குழந்தை நொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் மோகனவேல், தொண்டு நிறுவன நிர்வாகிகள் அலெக்ஸ், வருண், சாந்தபிரேம்குமார், சசிகுமார் மற்றும் கோவிந்தன், லதா உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜவேலன் அனைவருக்கும் நன்றி கூறினர்.
செங்குன்றம் அருகே அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய தொண்டு நிறுவனம்..