அனைத்து தொழில் சங்கங்கள் சார்பில் வருகின்ற ஜனவரி மாதம் 8 ஆம் தேதி இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் போராட்டத்தை விளக்கி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியூசி, சிஐடியூ போன்ற தொழில் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளரின் வேலையை விட்டு நீக்கும் அரசுகள் நடவடிக்கை கைவிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி மற்றும் ஊதியம் 500 ரூபாய் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்கொண்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருப்பத்தூரில் தொழில் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.