கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் நேற்று (டிச.27) உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் மலையாண்டஅள்ளி அரசுப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில், நன்பகல் நேரத்தில் மது போதையில், வாக்களிப்பதற்காக வந்த ராஜா என்பவர், ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கச் சென்றார். பின்னர் அவர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்குகளை பதிவு செய்தார். அதன் பிறகு ஓட்டுச் சீட்டுக்களை வாக்குப்பெட்டிக்குள் போடாமல் தனது சட்டைப்பைக்குள் வைத்துகொண்டு செல்ல முயன்றார். அதனை கவனித்த தேர்தல் அலுவலர்கள் அவரிடமிருந்த வாக்குச்சீட்டை பறிமுதல் செய்து வாக்குப்பெட்டிக்குள் போட்டனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போதையில் இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.