செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மாவரம் பகுதியில் மாநில மானிய நிதி ரூபாய் 1.47 கோடி மதிப்பீட்டிலும், ஒன்றி்ய பொது நிதி 47 லட்சம் மதிப்பீட்டிலும் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை அதிமுக காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. உடன் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கௌஸ்பாஷா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பெரும்பாக்கம் சி.விவேகானந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் பலராமன், அன்பழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு அருகே புதிய சாலை அமைக்க மாவட்ட செயலாளர் பூமி பூஜை.
• தமிழ் சுடர் காலை நாளிதழ்