சிவபெருமானின் சிறப்பை விளக்கும் பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் உள்நாடு, வெளிநாடு என பல்வேறு இடங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைக்கு நாள்தோறும் வருகை தந்து கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அகண்ட தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
இந்த தீபத்தில் பக்தர்கள் எண்ணையை ஊற்றி செல்வார்கள்.
இந்நிலையில் நேற்று அகண்ட தீபம் எரிந்து வந்த நிலையில் திடீரென எண்ணெய் முழுவதும் தீ பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் அருகில் இருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட தொடங்கினர்.
உடனடியாக தீயணைப்பு கருவிகளைக் கொண்டு கோவில் ஊழியர்கள் அகண்ட தீபத்தில் எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர்.மெல்லியதாக எரிந்து கொண்டிருந்த அகண்ட தீபம் திடீரென முழுவதுமாக எரிந்ததால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பக்தர்கள் ஏற்றிய அகண்ட தீபம்- திடீர் தீப்பிடித்து ஆக்ரோஷமாக எரிந்ததால் பக்தர்களிடையே பரபரப்பு.