அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க போக்குவரத்து கழகம் தடை..


நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், அசாம், திரிபுரா மற்றும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் டெல்லிக்கும் பரவி உள்ளது. டெல்லி சீலாம்பூர், ஜாப்ராபாத் பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி உள்ள நிலையில் போராட்டங்கள் குறைந்து வட மாநிலங்களில் அமைதி திரும்பி வருகிறது.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தின. இதனை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் நாளை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை செய்தியில் கூறியதாவது:- போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால், வழக்கம் போல் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்றும், யாருக்கும் விடுப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை நடைபெறும் பேரணியில் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ள கூடிய சூழ்நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தகக்கது.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image