தமிழகத்தில் இன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பல இடங்களில் அமைதியாகவும் ஒரு சில இடங்களில் சிறிய சிறிய பிரச்சினைகள் அரங்கேறின. அந்த வகையில்
புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிபட்டியில் வாக்குச்சாவடி வாக்கு பதிவு நிறைபெற்று அனைத்து வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல வாகனம் வர காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குச்சாவடியின் பின்பக்கக் கதவை உடைத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டுவிட்டு மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்றனர். இதனையடுத்து திருடப்பட்ட வாக்கு பெட்டியை மீட்க்கும் பணியில் போலிசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அஃதே பகுதியைச் சேர்ந்த இருவர் திருடி இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அவர்களிடம் இருந்து வாக்குப்பெட்டியை கைப்பற்றி பின்னர் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே வாக்குப்பெட்டி திருட்டு இரண்டு பேர் கைது .