திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்பு மற்றும் ஜமாத் அமைப்பு ஒன்றுதிரண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டதிருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது அவர்களுக்கு ஆதரவாக திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அமமுக, உள்ளிட்ட மற்றும் பல கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் 1, ஏடி.எஸ்.பி மற்றும் 6 டி.எஸ்.பி உள்ளிட்ட 1000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்...
ஆம்பூரில் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.