செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஈகை பகுதியில் உள்ள ஜீவா மெமோரியல் பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு RSP என்ற சாலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அதன் பின்பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளியின் ஆசிரியர் கோவிந்தன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது பள்ளியின் முதன்மை முதல்வர் ரகுவீரன் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டார். அவருக்கு மாணவர்கள் மரியாதை செலுத்தினர்., RSP மாணவர்கள் சாலையை பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி விரிவாக கற்பிக்கப்பட்டது. பள்ளியின் தலைவர் ஜி கே பாபு மற்றும் பள்ளியின் துணை தலைவர் கோமலவதிபாபு ஆகியோர் RSP குழுவில் இணைந்த மாணவர்களை வெகு வாக பாராட்டினர்.பள்ளியின் தலைவர் இக்குழுவை ஏற்பாடு செய்து மாணவர்கள் அனைவரும் நன்கு திறன்பட செயல்பட வேண்டும் என்றார்.
ஜீவா மெமோரியல் பப்ளிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு பயிற்சி முன்னோட்டம்.