திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் பள்ளியில் ரோட்டரி கிளப், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சூரியகிரகணம் திருவிழா நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் குனசேகரன் தலைமை தாங்கினார் . பள்ளியின் தாளாளர் ஜான்ஸ்டீபன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ம.ப சிவனருள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சூரிய கிரகணம் நிகழும் நிகழ்வுகளை கானும் வகையில் கண்ணாடிகளை வழங்கி சூரிய கிரகணம் நிகழும் நிகழ்வை மாணவர்களுடன் கண்டுகளித்து மாணவர்களிடம் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள், ரோட்டரி, லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில் மாணவர்களுடன் சூரிய கிரகணங்கள் நிகழ்வை கண்ணாடி மூலம் கண்டுகளித்த மாவட்ட ஆட்சியர்.