திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு பூங்கா நிதிஉதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் லயன்ஸ் சங்கம் இணைந்து சூரிய கிரகணம் திருவிழா நடத்தியது இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடங்கிவைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
அறிவியல் உண்மைகள் எல்லாம் மேலை நாட்டார் கண்டுபிடித்து பாட புத்தகத்தில் வைத்து நமக்கு சொல்லி தருவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம் அப்படி இல்லை நம் பாரத நாட்டிலேயே அறிவியல் விஞ்ஞானிகள் இருக்கின்றனர் அதில் குறிப்பாக அப்துல் கலாம் , சிவி ராமன், ராமானுஜர் போன்றவர் பல அறிவியல் ஆய்வுகளை நிகழ்த்தி இருக்கின்றனர். எனவே மாணவர்கள் நீங்களும் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி நம் பாரத நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார். இதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.