எதிரி நாடுகளை கதி கலங்கச்செய்யும் இந்தியா : புதிய ஏவுகணை சோதனை வெற்றி.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்ட பினாகா ஏவுகணை, ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.  பீரங்கி பொருத்தப்பட்ட இந்த பினாகா ஏவுகணை, எதிரிகளின் பகுதிக்குள் 75 கிலோமீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடிய திறன் பெற்றதாகும்.  
  பினாகா எம்.கே-II ராக்கெட்டின் ஊடுருவல் திறன், கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நடைமுறைகளை ஒருங்கிணைத்து, துல்லியமான தாக்கும் திறனை மேம்படுத்தி இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் ஊடுருவல் திறன், ஐஆர்என்எஸ்எஸ் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை அதன் அதிகரிக்கப்பட்ட தாக்குதல் தொலைவு, துல்லியத் தன்மை மற்றும் துணைக் கருவிகளின் செயல்பாடு உள்ளிட்ட அனைத்து நோக்கங்களையும் எட்டியது.  டிஆர்டிஓ அமைப்பின் கட்டுப்பாட்டில் பல்வேறு இடங்களில் செயல்படும் ஆய்வுக்கூடங்கள் ஒருங்கிணைந்து இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளன.
இலக்கை குறி வைத்து வழிநடத்தும் தொழில் நுட்பம் கொண்ட பினாகா ராக்கெட்கள், அதற்கான ஏவு எந்திரத்தில் இருந்து ஏவப்படக்கூடியவை. ஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை 12 வெவ்வேறு இலக்குகளை குறிவைத்தும் ஏவும் தொழில் நுட்பத்தை இந்திய ராணுவ தளவாட ஆய்வகம் உருவாக்கி உள்ளது.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image