மதுரையில் பருப்புகள் மற்றும் தானியங்கள் சங்கம் நடத்தும் பல்ஸ் கான்க்ளேவ் ..

இந்திய பருப்புவகைகள் வர்த்தம் மற்றும் தொழில்துறைக்கான நோடல் அமைப்பான 'இந்திய பருப்புகள் மற்றும் தானியங்கள் சங்கம் (IPGA)' தனது, 5-வது பதிப்பான “தி பல்சஸ் கான்கிளேவ்” நிகழ்வை அறிவித்துள்ளது.

உலகளாவிய இந்த வர்த்தக மாநாடு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 முதல் 14 வரை மகாராஷ்டிராவின் லோனாவாலாவில் உள்ள அம்பி வாலி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு இந்தியாவில் இருந்து 1500க்கும் மேற்பட்ட வர்த்தக பங்குதாரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பருப்புகள் மற்றும் தானியங்கள் சங்க தலைவர் திரு.ஜீது பேடா இந்த நிகழ்வு குறித்து கருத்து கூறுகையில், “ மாண்புமிகு பிரதமரின் இலட்சியமான 2022 ஆம் ஆண்டின்போது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதோடு, அதை அடைவதற்கு ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பருப்பு வகைகள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தி பல்சஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் முக்கிய நோக்கமே, உறுப்பினர்களை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதாகும். உற்பத்தி மற்றும் தேவைக்கு சமமான இறக்குமதியை சமநிலைப்படுத்துவதன் மூலம், இந்திய நுகர்வோர்களுக்கு எந்த விதத்திலும் நெருக்கடி அல்லது அதிக சில்லறை விலைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே எங்களின் நோக்கமுமாகும். அதற்காக இப்படியான ஒரு நிகழ்ச்சியினை ஏற்படுத்தியதற்கு பெரும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image