சென்னை:-
குடியுரிமை சட்டத்திருத்ததை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 23ம் தேதி பேரணி நடத்தும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இந்த பேரணி இன்று காலை 10 மணிக்கு எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே தொடங்கி ராஜரத்தினம் மைதானத்தை நோக்கி நடைபெற்றது.இந்த பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது.
இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,ப.சிதம்பரம், வைகோ,திருமாவளவன், தயாநிதி மாறன், கனிமொழி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கி.வீரமணி, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேரணியில் பங்கேற்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பங்கேற்றனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக கூட்டணி தலைவர்கள் முழக்கம் எழுப்பினர்.
பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்தது பேரணி இல்லை; போர் அணி.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும்.
இன்று நடைபெற்ற பேரணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்பரம் செய்த அரசுக்கு மற்றும் பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி' என்றும் கூறினார்.