சேலத்தில்  வரிசையில் நின்று உள்ளாட்சித் தேர்தலில் குடும்பத்தினருடன்  வாக்களித்த முதல்வர் பழனிசாமி.


தமிழகத்தில் ஊரக ஊராட்சி தேர்தல்  2 கட்டங்களாக நடைபெறுகிறது.இதில்  பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் இன்று முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கியது.அனைத்து வாக்குசாவடிகளிலும்  பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்பு தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் என்பதால்  வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வருகை தந்து வரிசையில் நின்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image