சென்னை :-
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணமாகும் அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும் இதுவே சூரிய கிரகணம் எனப்படும் . இந்நிலையில் இன்று ஏற்பட்டுள்ள சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் என்றும் சொல்லப்படுகிறது.அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். இந்த முழு வளைய வடிவ சூரிய கிரகணம் இன்று தமிழகத்தில் வேலூர், சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி போன்றபகுதியில் ஏற்பட்டது.பொதுமக்கள் சூரிய கண்ணாடி உதவியுடன் இந்த அற்புதமான வளைய வடிவ சூரிய கிரகணத்தை கண்டுகளித்தனர்.