இசைஞானி இளையராஜாவுக்கு கேரளா மாநில அரசு ஹரிவராசனம் விருது அறிவிப்பு.


உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களால்  இசைஞானி,இசைமேதை என பலராலும் அன்போடு அழைக்கப்படுவர் இசையமைப்பாளர் ‌இளையராஜா. இவர் இசை துறையில்  செய்துள்ள எண்ணிலடங்கா சாதனையை பாராட்டும் வகையில் கேரளா அரசு ஹரிவராசனம் விருது வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளது. உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில்  வரும் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி அன்று  நடைபெறும் நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு இந்த ஹரிவராசனம் விருது வழங்குகிறது கேரளா மாநிலம் அரசு.  இந்த ஹரிவராசனம் விருது மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக  விருது வழங்கப்படுவதாக கேரள அரசு கூறியுள்ளது. இத்துடன் 'Worshipful Music Genius' என்ற பட்டமும்,ஒரு லட்சம் ரூபாய ரொக்கப்பரிசும்  வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தையே இசையால்  கட்டிப் போட்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு பல விருதுகள் கிடைத்திருந்தாலும் தான் நேசிக்கும் ஐயப்பன் சன்னதியில் வைத்து விருது கிடைப்பதில் மகிழ்ச்சி என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இசைஞானி இளையராஜா..


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image