காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி பரங்கிமலை ஒன்றியத்திற்குற்பட்ட மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி மற்றும் மேடவாக்கம் அரபு மொழித்துறை சார்பாக உலக அரபி மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வண்டலூர் புகாரியா அரபிக் கல்லூரி பேராசிரியர் முனைவர்.அலி இப்ராஹிம் ஜமாலி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நவின உலகின் அரபி மொழியின் முக்கியத்துவம் என்கின்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.