தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சியாக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி தரும்.அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு..

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சியாக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி தரும்.அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு.


 விருதுநகர் மாவட்டம் சிவகாசி வடக்கு மற்றும் மேற்கு  ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டும் வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட செயலாளரும் தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வீதிவீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர்.


 அம்மாவுடைய ஆட்சியை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செய்து வருவதால் தமிழக  மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.  குறிப்பாக பொங்கல் பரிசு 1000 ரூபாய் மற்றும்  கிராமங்கள் தோறும் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்வி துறைக்குதேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கி கல்வித்துறைக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறார்.அதேபோல் வேளாண்மை துறை,தொழில் துறையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பாக அம்மா வழியில் ஆட்சி செய்து வருகிறார். இனிவரும்  காலங்களிலும் அம்மாவின் அரசு தொடர வேண்டும் என மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் நல்லாட்சி தான் தொடரும். குறிப்பாக அதிமுகவின் வாக்குகளை யாராலும் பிரிக்க முடியாது. குறிப்பாக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். பொதுமக்களின் அபிமானத்தை பெற்றவர்கள்.குறிப்பாக ஊரோடு ஊராக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள்.குறிப்பாக அதிமுக தொண்டர்கள் எதற்கும் துணிந்தவர்கள் எங்கள் லட்சியம் வெற்றி ஒன்றே என்று பாடுபடுபவர்கள் அதனால்தான்  அதிமுக கட்சித் தொண்டன் இருக்கும் வரை அதிமுக என்ற எஃகு கோட்டையை யாராலும் அசைக்க முடியாது.ஆனால் தற்பொழுது தமிழகத்தில் எதிர்க்கட்சியில் சூழ்ச்சியினால் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து  பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது ஆனால் ஒருநாள் உண்மை கண்டிப்பாக வெளிவரும் அப்பொழுது மக்கள் இந்த சட்டத்தை குறித்து நன்றாக புரிந்து கொள்வார்கள். எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்று நினைத்துக்கொண்டு தற்பொழுது இனவாதத்தையும் மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விரித்துக் கொண்டு வருகிறார். அண்ணா முதற்கொண்டு கலைஞர் வரை 
   ஊர் ஒன்றாக இருக்கக் கூடாது அதை எப்போதும் இரண்டாக பிரித்து வைத்து தான் திமுக அரசியல் செய்து வந்துள்ளது. அதனை   ஸ்டாலின் தற்போது மிகவும் சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தில் இந்தியாவில் வாழும் எந்த முஸ்லிமுக்கும் பாதிப்பில்லை என மத்திய அரசு உத்தரவாதம் அளித்து இருக்கும் நிலையிலும் திமுக போராட்டம் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக இந்த சட்டத்தை முஸ்லிம் மதத்தில் உள்ள ஜமாத்தின்  பெரிய தலைவர்கள்  ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் திமுக அதை பெரிது படுத்துவது வேடிக்கையானது.குறிப்பாக அண்டை நாடுகளான பங்களாதேஷ் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் தான் இந்தியாவில் தஞ்சம் அடைந்து குடியுரிமை கேட்டு வருகிறார்கள். மாவோயிஸ்டுகளையும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் தலைவராக மு க ஸ்டாலின் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாகி கொண்டு வருகிறார் குற்றம் சாட்டினார்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image