கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த குமார்-சுமத்ரா தம்பதியினரின் மகன் ஹரிஷ் காரமடை வித்யவிகாஷ் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றான். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் தனியார் விடுதியில் ஹரிஷ் தூக்கிட்டு இறந்து கடந்த நிலையில் காவல்துறை மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மாணவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாணவன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த நிலையில், நேற்று மாலை மாணவனின் உறவினர்கள் சுமார் 100 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது...