குன்னூர் அருகே சாலை வசதி அமைத்துத் தரக்கோரி  பொதுமக்கள்  வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம். உள்ளாட்சித்தேர்தலை   புறக்கணிக்க முடிவு.


நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த  மேலூர் ஊராட்சியில் கீழ் டெரேமியா குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களாகவும், விவசாயிகளாகவும் உள்ளனர். இந்த கிராமத்திற்கு செல்லும் குறுகலான சாலையில் வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல ஆண்டுகளாக மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றால் கூட நோயாளிகளை நாற்காலியில் அமர வைத்து, 3 கி.மீ., தூரத்திற்கு தூக்கிச் சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்புஅவசர தேவைக்கு செல்ல கூட வாகன வசதி இல்லாமல் உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி டெரேமியா குடியிருப்பு பகுதி மக்கள் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மக்கள் ஒன்றுசேர்ந்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image