திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவலன் செயலியை அமைச்சர் வீரமணி துவக்கி வைத்தார்.

 


தமிழ் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும். குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை அவசர காலத்தில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மற்றும் அவசரத் தேவைகளுக்கு தமிழக காவல்துறை சார்பில் புதிய காவலன் செயலியை  அறிமுகப்படுத்தியது. கடந்த மாதங்களில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக இந்த காவலன் செயலியை  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலன் செயலி துவக்க விழா  காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.‌இதில்  மாவட்ட ஆட்சியர் சிவனருள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக  தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி கலந்துகொண்டு  காவலன் செயலியை  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். அதன் பின்  பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் என்னையும் அறிமுகப்படுத்தி வைத்து விழா சிறப்புரையாற்றினார். 


போது பேசிய அமைச்சர். 


தமிழகத்தில் காவல்துறையை  நவீனமயமாக்க முன்னாள் முதல்வர் அம்மாவின் வழியில் தற்போது ஆட்சி செய்து வரும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி  அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து உலக அளவில் காவல்துறையை நவீன மயமாக்கி வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்பொழுது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும். அவசர காலங்களில் உடனடியாக காவல்துறையை அணுகவும் காவல்துறை சார்பில் அதிநவீன புதிய காவலன் செயலியை   அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும்  மாணவிகள் இந்த காவலன் செயலியை பதிவிறக்கம் உரிய நேரத்தில் காவல்துறையை தொடர்பு கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. 


புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின்  மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை புதிய அலுவலகங்கள் கூடிய விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். குறிப்பாக இந்த காவலன் செயலியை அனைத்து தரப்பு மக்களும் பதிவிறக்கம் செய்து அப்பகுதியில் நடக்கும் குற்றச் சம்பவங்களில்  இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என கூறினார். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல்,  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேஜி ரமேஷ்  திருப்பத்தூர் கூட்டுறவு சங்க தலைவர் டிடி குமார், காவல்துறை ஆய்வாளர்கள், மதனலோகன், உலகநாதன்,  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் தம்பா கிருஷ்ணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image