உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பு. திருவள்ளூர் அருகே  வாக்குப்பெட்டிக்கு தீ வைப்பு. 7 பேர் கைது.


தமிழகத்தில் ஊரக ஊராட்சி தேர்தல்  2 கட்டங்களாக நடைபெறுகிறது.இதில்  பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் இன்று முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கியது.அனைத்து வாக்குசாவடிகளிலும்  பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்பு தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் என்பதால்  வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கத்தில், அரசு உயர்நிலை பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது.இந்த மையத்தில் 5 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1200 வாக்காளர்களை கொண்ட இந்த வாக்கு சாவடியில்  நண்பகல் வரை 400 முதல் 500 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளின் பின்புறம் தேர்தல் ஆணையம் பதித்திருந்த முத்திரை, முன்புறம் ஒரு குறிப்பிட்ட சின்னத்தின் மீதும் பதிவாகியிருந்ததாக புகார் எழுந்துள்ளது.இதையடுத்து இதுவரை பதிவான வாக்குகள் செல்லாத வாக்காகி விடும் என்று கூறினர்.மேலும்  பிற்பகல்  12 மணியளவில் வாக்குப்பதிவு மையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள்  அங்கிருந்த மேசைகளை கவிழ்த்து, ஆவணங்களை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் வாக்குப்பெட்டிகளுக்குள் தீயை கொளுத்தி போட்டுள்ளனர்.இதைத் தொடர்ந்து, பாப்பரம்பாக்கத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார்.அப்போது பாப்பரம்பாக்கத்தில் மறுவாக்குப் பதிவு நடத்தக்கோரி பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.   இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்  வாக்குப்பெட்டிக்கு தீ வைத்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த  7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image