புதுச்சேரியில் நீயா நானா போட்டியில் கவர்னருக்கும் முதல்வருக்கும் இடையே மீண்டும் பனிப்போர்.


புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் புத்தாண்டை வரவேற்க புதுச்சேரியில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், புத்தாண்டு ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் உள்ள கமிட்டி அரங்கில் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் அருண், காவல்துறை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, சுற்றுலாத்துறை இயக்குனர், தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதை அறிந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புத்தாண்டை கொண்டாடுவதற்காக கடற்கரையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கடற்கரை சாலையில் இரவு நேரத்தில் சுமார் 2 கி.மீ தூரம் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா, மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது பல்வேறு ஆலோசனைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நாராயணசாமி, சமூக வலைதளத்தில் கிரண்பேடியை கடுமையாக சாடி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போட்டி அரசாங்கத்தை நடத்துவதுவதாகவும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநருக்கென்று தனி அதிகாரம் இல்லை என்றும், சட்டத்தை மதித்து போட்டி அரசாங்கம் நடத்துவதை நிறுத்துங்கள் என கிரண்பேடியை சாடி முதலமைச்சர் நாராயணசாமி பதிவிட்டுள்ளார். இதனால் மீண்டும் இருவருக்குமிடையே அதிகார பணிப்போர் ஏற்பட்டுள்ளது இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image