ஸ்ரீ வில்லிபுத்தூர் பண்டிதன் பட்டி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று ஊரக வளர்ச்சி பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்டிதன்பட்டி வாக்குசாவடியில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்.