சென்னை:-
சென்னையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர்ஜெயக்குமார் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:- 'அண்ணாவின் புகழை கட்டிக்காக்கும் இயக்கம் அதிமுகதான் நாங்கள் அண்ணாவை எப்போதும் மறக்கவில்லை.ஆனால் திமுக தான் அண்ணா,பெரியார் ஆகியோரை மறந்துவிட்டது தற்போது ஸ்டாலினுக்கே தலைவர் அவரது மகன் உதயநிதி தான்.அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படாது.ஸ்டாலின் குறுக்கு புத்தியில் பேசுகிறார் என்றும் .
நடிகர்களை பார்ப்பதற்காகவாவது மக்கள் கூட்டம் வரும் என்பதற்காக, ஸ்டாலின் நடிகர் சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்'என்றும் கூறினார்.