திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று காலையில் பெங்களூரிலிருந்து யிலிருந்து எர்ணாகுளம் வரை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தடை செய்யப்பட்ட பான்மசாலா கடத்துவதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவலின் பேரில் ஓடும் ரயிலில் சோதனை செய்ததில் எஸ் 2 கோச்சில் தடைசெய்யப்பட்ட 35 கிலோ பான்மசாலா பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 1 லட்சம் மதிப்பிலான பான்மசாலாவை திருப்பத்தூர் ரயில்வே போலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் 35 கிலோ குட்கா பறிமுதல்.