முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 32ஆம் ஆண்டு நினைவு தினம்..
சோழிங்கநல்லூர் தொகுதி புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மேற்கு பகுதி கழக செயலாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் சென்னை மாநகராட்சியின் 187வது வட்டம் கந்தன் சாவடி எம்.ஜி.ஆர் சாலையில் அமைந்துள்ள அவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர் அதை தொடர்ந்து அவ்வட்டத்திற்குட்பட்ட
பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் 187வது வட்ட செயலாளர் எம்.வெங்கடேசன்,மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் ஜே.ஜே.345 கூட்டுறவு கடன் சங்க தலைவர் பி.ரஞ்சித் குமார் மற்றும் தொகுதி வட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.