உளுந்தூர்பேட்டை அருகே இரு ஆம்னி பேருந்துகள் நேருக்கு நேர்  மோதி விபத்து. 30 பயணிகள் படுகாயம் காவல்துறை விசாரணை.


திருச்சியில் இருந்து சென்னை நோக்கி  தனியாருக்கு சொந்தமான சொகுசு  பேருந்து ஒன்று சென்னை- விழுப்புரம்  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது அப்போது  உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே  சாலையின் எதிரே திருச்சி நோக்கி மற்றொரு தனியார் சொகுசு பேருந்தும் அதிவேகமாக வந்துகொண்டிருந்த போது தீடீரென  எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் இரு பேருந்துகளும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன இதில் இரண்டு பேருந்துகளின் முன் பகுதியும் சுக்குநூறாக நொறுங்கியது. இரு பேருந்துகளிலும் பயணம் செய்த  30க்கும் மேற்பட்ட பயணிகள்  படுகாயமடைந்து அலறி துடித்தனர். உடனடியாக  வழியாக சென்றவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை  மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image