இந்தியாவில் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று இந்தாண்டு நடைபெற்ற சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்நிலையில், டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இந்த புதிய தலைமை தளபதிக்கு நான்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும்.மேலும் ராணுவ விவகாரங்கள் துறைக்கான தலைவராகவும் விளங்குவார் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி புதிய தலைமை தளபதி பதவிக்கு தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முப்படை தளபதியாக பிபின் ராவத் நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு.