மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட பரப்புரையின் நிறைவு நாளான இன்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்திய அரசு பல்வேறு மாநிலங்களின் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து சிறந்த நிர்வாகத்திற்கான விருதை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது.அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்புதமிழ்நாட்டில் முன்னதாகவே நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றத்திற்கு சென்று தடை செய்தது திமுகதான். திமுக தலைவர் ஸ்டாலின் 23ஆம் புலிகேசிபோல் நடந்துகொள்கிறார். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு இடமின்றி நல்லபடியாக நடந்துள்ளது. ஒருவர் நான்கு வாக்குச்சீட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலையிலும்கூட 27 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. சாதனைக்குரியது. இது தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி இனி வரும் காலங்களில் அதிமுகவுக்கு தொடர் வெற்றி தான் என பேசினார்.இதில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
திமுக தலைவர் ஸ்டாலின் 23ஆம் புலிகேசியை போல் செயல்படுகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ நக்கல்.