ரயில்வே துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஐசிஎஃப் தொழிற்சாலையில், ரயில்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் Train 18 ரயில் பெட்டிகளும் ஐசிஎஃப் தொழிற்சாலையில்தான் வடிவமைக்கப்படுகின்றன.கடந்த நிதியாண்டில் 3000 ரயில் பெட்டிகளை தயாரிக்க 289 நாட்களை எடுத்து கொண்ட ஐசிஎஃப் தொழிற்சாலை, தற்போது 215 நாட்களிலேயே 3 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை புரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் 4000 ரயில் பெட்டிகளை தயாரிக்கவும் ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
215 நாட்களில் 3 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை சாதனை..