ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில்  2,31,890 பேர் போட்டியிடுவதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27,30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்புமனுத்தாக்கல் முடிந்து இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி, 18,570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்தலில் போட்டியிட 3,02,994 பேர் மனுத்தாக்கல் செய்திருந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதில் 48,891 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்ப பெற்றதாகவும், 3,643 மனுக்கள் பரிசீலனைக்கு பின்பு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 73 ஆயிரத்து 405 பதவிகளுக்கு, 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் போட்டியிட உள்ளனர்.இதில் கிராம வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு ஒரு லட்சத்து 70,898 பேரும்,ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 35,611 பேரும்,ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான போட்டியில் 22,776 பேரும்,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2,605 வேட்பாளர்களும் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image