கர்நாடக மாநிலம் மைசூர் மாண்டியா பகுதியை சார்ந்தவர் குருபிரசாத் இவரது மகள் திருமணத்திற்காக காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுக்க தனது உறவினர்களுடன் தனது காரை தானே ஓட்டி வந்த குருபிரசாத் திருமணத்திற்காக புடவைகளை வாங்கிகொண்டு தனது இனோவா காரில் மாண்டியா நோக்கி திரும்பிய சமயத்தில் வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே இரவு 10 மணி அளவில் காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்ட குருபிரசாத் காரை நிறுத்தி இன்ஜினை திறந்து பார்த்தபோது அதில் மளமளவென தீ பிடித்துள்ளது.
இதில் சுதாரித்த குருபிரசாத் உறவினர்களை உடனடியாக காரில் இருந்து அவசர அவசரமாக துணிகளை எடுத்துக்கொண்டு இறக்கியுள்ளனர் .
பின்பு தீ மளமளவென கொளுந்துவிட்டு தீப்பிடித்து எரிவதை பார்த்து சுங்கச்சாவடி ஊழியர்கள் விரைந்து வந்து காரின் தீயை அணைக்க முயன்று உள்ளனர்.
ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால் உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது சுங்க சாவடி அருகே நடந்த இந்த விபத்தில் குருபிரசாத் உடன் பயணித்த அவரது உறவினர்கள் 8 பெண்கள் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இந்த விபத்தில் கார் மற்றும் அவரது செல்போன் உள்ளிட்ட உடமைகள் எரிந்து நாசமானது இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் முற்றிலும் எரிந்து நாசமானது. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நெரிசலில் சிக்கி தவித்த வானங்கள் .