தமிழகத்தில் மோடிக்கு கோயில். திருச்சி அருகே அசத்திய விவசாயி.


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது எரகுடி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சங்கர்.. 50 வயதாகிறது.இவர் ஒரு விவசாயி.. கல்யாணமாகி பானுமதி என்ற மனைவி உள்ளார்.. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.சங்கரை பொறுத்தவரை, இவர் ஒரு பாஜக தொண்டர்.. எரகுடி விவசாய சங்க தலைவரும்கூட.. இது எல்லாவற்றிற்கும் மேலாக சின்ன வயசில் இருந்தே நரேந்திரமோடியின் வெறித்தனமான ஃபேனாக இருந்திருக்கிறார்.. அப்பவே அப்படி என்றால், இப்போது மோடி பிரதமர் ஆனதில் இருந்து மோடியின் பக்தராகவே மாறிவிட்டார்.
பிரதமருக்கு ஒரு கோயிலை கட்ட ஆசைப்பட்டார்.. அதுவும் எரகுடியில் சொந்தமாக உள்ள விவசாய தோட்டத்தியே இந்த கோயிலை கட்ட ஆசைப்பட்டார்.. பார்ப்பதற்கு சின்ன கோயிலாகதான் இருக்கிறது.. ஆனால் சொந்த செலவில் இதை கட்டி, அதற்குள் மோடியின் ஒரு சிலையையும் வைத்துள்ளார்..தினமும் மோடி சிலைக்கு பாலாபிஷேகம், தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார்.
இதை பற்றி சங்கர் சொல்லும்போது, "சின்ன வயசில் இருந்தே பிரதமர் மோடி மீது அன்பு எனக்கு.. எந்தவித எதிர்பார்ப்பும், யாருடைய உதவியும் இல்லாமலேயே என் சொந்த செலவில் இந்த கோயிலை கட்ட விரும்பினேன். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் அப்போது என்னால் கோயில் கட்ட முடியவில்லை.இப்போ விவசாயத்தில் ஓரளவு பணம் கிடைச்சது.. அதனால 8 மாசத்துக்கு முன்னாடிதான் கோயில் கட்ட ஆரம்பிச்சேன்.. கட்சியின் மூத்த தலைவர்களை வரவழைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதுதான் இப்போது என் ஒரே லட்சியம்.. கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு சிறந்த  மனிதர்..அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டுதான் இந்த கோயிலையே கட்டி உள்ளேன்' என்றார் சங்கர்  பூரிப்புடன். சினிமா நடிகை குஷ்புக்கு கோயில் கட்டிய  தமிழகம்தான் தற்பொழுது பாரதப் பிரதமர் மோடிக்கும் கோயில் கட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image