தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க முடியாது என இலங்கை அதிபர் அறிவிப்பு..

சென்னை:


பெரும்பான்மை மக்களின் சம்மதமின்றி, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க முடியாது, என்று அந்நாட்டு அதிபர் கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.


கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையம் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், 'சர்வதேச விசாரணை அமைப்பை ஏற்படுத்தி இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,' என கூறப்பட்டுள்ளது.


இந்த தீர்மானம் குறித்து இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, போர் குற்றம் பற்றிய 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தை தற்போதைய வடிவில் பரிசீலிக்க முடியாது என்றார்.


சொந்த நாட்டுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்ற அவர், அதேபோல், பெரும்பான்மை மக்களின் சம்மதம் இல்லாமல், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வாய்ப்பில்லை என்று இலங்கை அதிபர் கூறியிருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image