2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தை சுனாமி தாக்கியது. இதில் கடற்கரையோரம் உள்ள மீனவர்கள் குடும்பங்கள் உட்பட 7000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதில் உயிரிழந்தவர்களுக்கு
நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவிடத்தில் காஞ்சி அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.ராஜீ, தனபால் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன், புதுப்பட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள் உட்பட கட்சிப் பிரமுகர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றி, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.