தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து, பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க, சிறந்த அறிவியல் கண்டு பிடிப்பாளர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், தலா, 1 லட்சம் ரூபாய், பரிசுத் தொகை வழங்க, சென்னை அறிவியல் நகரம் திட்டமிட்டது.இதற்கு ஒப்புதல் வழங்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
உருவாக்கும் திறன்அதன்படி, ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர், ஊரகப் பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மரபு வழியான தொழில்நுட்ப அறிவாற்றலோடும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.ஊரகம் என்பது, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளை குறிக்கும்; நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு பொருந்தாது. பரிசுத் தொகை பெற, தகுதியான நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாதிரி விண்ணப்ப படிவத்தை, www.sciencecitychennai.in என்ற இணையதளத்திலிருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பதாரர், தன் கண்டுபிடிப்பிற்கான ஆவணங்கள், சான்றிதழ்கள், புகைப்படங்கள்,சோதனை அறிக்கைகள் ஆகியவற்றை, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.தடையின்மை
நிறுவனங்களில் பணியாற்றும் விண்ணப்பதாரர்கள்.அந்நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்பட்ட, தடையின்மை சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். குழுவாக புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருந்தால், குழு உறுப்பினர்கள் அனைவரிடமும், ஒப்புதல் பெற்று, அதை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும்.விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியே, ஜன.,10க்குள், சென்னை அறிவியல் நகரத்திற்கு, அனுப்பி வைக்கப்பட வேண்டும் என, அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம் தெரிவித்துள்ளார்.
அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுஅறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம் அறிவிப்பு.