திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன்.இவர் மாச்சம்பட்டு காப்புக்காட்டு மலைப்பகுதி அடிவாரத்தில் கோதண்டராமன் என்பவரின் நிலத்தை குத்தகையிற்கு எடுத்து நான்கு ஆண்டுகளாக பயிர் செய்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் தனது நிலத்தில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் மற்றும் தக்காளி பயிர்களுக்கு மருந்து தெளிக்க மனோகரன் வந்த போது நிலப்பயிர்கள் சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து நிலத்தின் மேற்பகுதியில் சென்று பார்த்த போது யானை கூட்டத்திட் கால் தடங்கள் இருப்பது தெரியவந்தது.சுமார் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்களில் தக்காளி செடிகள் முழுவதும் யானைகள் சேதப்படுத்திருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.எப்போதும் இல்லாமல் தற்போது விளைநிலங்களில் யானை கூட்டம் வருவது முதல்முறையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சேதமடைந்த நிலத்தை பார்வையிட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் இனி யானை கூட்டம் இப்பகுதியிற்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.