பாரதியார் பிறந்த தினத்தை  எழுத்தாளர் தினமாக அறிவிக்க வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கோரிக்கை.

தமிழ் எழுத்தாளர்களின் நலன் கருதி செங்கல்பட்டு மாவட்டம்  செங்கல்பட்டு நகரில் தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டக் கிளை புதிதாக ஏற்படுத்தப் பட்டது. அமைப்புக் கூட்டம் மாநிலத் தலைவர் பாரதியார் விருதாளர் பாரதி சுகுமாரன் தலைமையில்  நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் கருப்பசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளாக அவைத் தலைவர் வீரமணி, தலைவர் தமிழரசன், செயலாளர் ப.குணா பொருளாளர் தேவமனோகரி ஒருங்கிணைப்பாளராக அக நம்பி பாலசுப்பிரமணியன் மற்றும் துணைத் தலைவர்களாக ந.பரஞ்சோதி,சீனி. சந்திரசேகரன் துணைச் செயலாளராத செஞ்சோலை, சா.கா.பாரதி ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 60 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் நலன் கருதி எழுத்தாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் , அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழ் மொழியில் மூன்றில் இரண்டு மடங்கு அளவில் ‍ எழுதப்பட வேண்டும் , தவறியவர்களுக்கு அபராதம் ரூ 10 ஆயிரம் விதிக்கவும், இவற்றை கண்காணிக்கும் அதிகாரத்தை தமிழ் வளர்ச்சித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும், நூலகத்துக்கு முழு அதிகாரம் படைத்த இயக்குநர் நியமித்தல், நூலகத்துறை விரிவாக்கம் செய்திடல் வேண்டும் எனவும் கோரிக்கை  விடப்பட்டது. மேலும் எழுத்தாளர்கள் சுயமாக வெளியிடும் நூல்களை முன்னுரிமை கொடுத்து வாங்கவும், நாட்டுடைமை யாக்கப்பட்டு ஒரே தலைப்பில் நூல்களை  பல பதிப்பகங்களில் வாங்குவதை தவிர்த்து ஒரு பதிப்பில் பெற்ற அதே நூலை வேறு பதிப்பகத்தில் வாங்கக் கூடாது எனவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய எழுத்தாளர்களின் நூல்கள் அச்சில் வெளியிட தமிழ் வளர்ச்சித் துறைக்கு வழங்கும் நிதியை அதிகரித்து தரவும் அகவை முதிர்ந்த எழுத்தாளர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்க வேண்டும் , எழுத்தாளர் முகவரி அடங்கிய நூலை தமிழக அரசு அச்சிட்டு வெளியிட வேண்டும் அரசு மருத்துவ மனையில் எழுத்தாளர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும், பாரதியார் பிறந்த தினத்தை எழுத்தாளர் தினமாக அறிவிக்கவும்  , மொழி வளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் பெயர்களில் விருதுகள் நினைவுத் தூண்கள் ஆண்டு தோறும் 100 தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை , தமிழ்ச் செம்மல் போன்ற உயரிய விருதுகள் புதுவை மும்பை, தில்லி , கர்நாடகா கேரளா போன்ற மாநில தமிழ் அறிஞர்களுக்கும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் விடப்பட்டன.  இந்த கூட்டத்தில் சங்கத்தின் பெயரை அனைத்துலக தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் என அறிவித்ததுடன் முறையான சங்கத்தின் துவக்க விழா விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.  முன்னதாக கூட்ட அரங்கில் அமைக்கப் பட்ட பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாநில தலைவர் பாரதி சுகுமாரன் மாலையணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அங்குள்ள ஓவிய கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image