இலங்கை தமிழர்களுக்கு ஒரே தீர்வு ஈழம் அமைப்பதே ஆகும் இதுவே பாமகவின் கோரிக்கை என திருப்பத்தூரில் அன்புமணி  தங்கை மற்றும் தம்பி படை நிர்வாகிகள் மத்தியில் பேச்சு.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை  பக்கிரி தர்கா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்கைகள் படை , தம்பிகள் படை ,மக்கள் படை  நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்துகொண்டு இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார்.
இதில் பேசிய அவர்.


தமிழகத்தில்  எதிர்கட்சிகள் எதற்காக போராட்டம் நடத்தி வருகிறார் என்று அவர்களுக்கு தெரியவில்லை. தமிழகத்தின் இன்றைய தேவை வேலை வாய்ப்புகள் அதற்காக போராட்டம்  செய்ய வேண்டும் ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டத்திருத்ததை கண்டித்து தமிழக மக்களை திசை திருப்பி வருகின்றனர். இந்த குடியுரிமை சட்டத்திருத்தில் ஏன் இலங்கை தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என எதிர்கட்சிகள் கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரேயொரு நிலைபாடு அவர்களுக்கு தனி நாடு அது ஈழம் அமைப்பதே தீர்வு ஆகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு உருவாக்க உடனடியாக சிப்காட் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். இனி வருங்காலத்தில் இளைஞர்கள் நல்ல முன்னேற்றம் அடைய பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கும் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜி கே மணி, மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார், மாநில துணை பொதுச்செயலாளர் டி.கே. ராஜா, மாநில துணை தலைவர் பொன்னுசாமி, மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா, மாவட்ட செயலாளர் கிருபாகரன், முன்னாள் எம்எல்ஏ நடராஜன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் கணபதி,  மாநில இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.சிவா, மாநில இளைஞரணி துணை பொதுச் செயலாளர் அக்னி விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் அசோக் குமார், சிலம்பரசன், சதிஷ் குமார் உட்பட்ட ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் இதர அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image